இனத்தைப் பாதுகாக்க குழந்தைகளைப் பெற்றெடுங்கள்

சிங்களத் தாய்மாரை 5 அல்லது 6 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேசப்பிரிய கோரிக்கைவிடுத்துள்ளார். நுகேகொடை அம்புல்தெனியவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிங்களத் தாய்மார்கள் அதிகளவு பிள்ளைகளைப் பெற்றால் மாத்திரமே நாட்டையும், இனத்தையும், மதத்தையும் பாதுகாக்கமுடியும். இரண்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு அவர்களை வளர்க்க முடியாது என்கிறார்கள். முஸ்லிம் தாய்மார் 5 அல்லது 6 பிள்ளைகளைப் பெற்று வளர்க்கின்றனர். எனவே சிங்களத் தாய்மாரும் 5 அல்லது 6 பிள்ளைகளைப் பெற்று வளர்க்கமுடியும். முடிந்தளவு சிங்கள இனத்தைவிஸ்தரிக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு செய்தால் மட்டுமே எமது இனத்தையும், நாட்டையும், பௌத்தத்தையும் பாதுகாக்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com