இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை – இலங்கைக்கு ஆபத்தில்லை

இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இங்கைக்கு ஆபத்தில்லை எனஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ராவுக்கு தென்மேற்கே உள்ள படாங்கில் இருந்து 808 கி.மீ. தூரமுள்ள பகுதியை மையமாகக் கொண்டு, இந்திய நேரப்படி மால 6.20 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுமத்ராவை ஒட்டிய மேற்கு, வடக்கு பகுதிகள் மற்றும் அசெக் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆபத்தில்லை

இதற்கிடையே, இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுகத்தால் இலங்கையை சுனாமி தாக்க தற்போது வாய்ப்பில்லை எனவும், நிலநடுக்கத்தால் ஏற்படும் விளைவை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com