சற்று முன்
Home / செய்திகள் / ‘இந்து மக்களே எழுச்சி கொள்’: மன்னாரில் இந்து எழுச்சி மாநாடு

‘இந்து மக்களே எழுச்சி கொள்’: மன்னாரில் இந்து எழுச்சி மாநாடு

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து மக்களே எழுச்சி கொள் எனும் இந்து எழுச்சி மாநாடு இன்று இடம்பெற்றது.

காலை 8 மணிக்கு மன்னார் பலத்தடியில் இருந்து நடராஜர் சிலை மன்னார் நகர சபை மண்டபம் வரை பேரணியாக கொண்டுவரப்பட்டு மன்னார் நகரசபை மண்டபத்தில் மாநாடு ஆரம்பமானது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாற்று மதத்தின் இடையூறுகள் இன்றியும் மாற்று மத மக்களுக்கு இடையூறு இன்றியும் வாழ்வது தொடர்பாகவும் இந்து நீதி இந்துக்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றது என்பது தொடர்பாகவும் எடுத்துரைப்பதே மாநாட்டின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த எழுச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக சின்மய மிஷன் சுவாமிகள், தென் கையிலை ஆதீனம், செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன், தமிழருவி த.சிவகுமாரன், செந்தமிழ் சொல்லருவி லலீசன், எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன், திருக்கேதீஸ்வர ஆலயபணிச்சபை பொருளாளர், இந்து ஆலய குருக்கள், அறநெறி ஆசிரியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் குறித்த நிகழ்வில் இந்து சமயமும் திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையும், பாலாவியின் புனிதம், மன்னாரும் இந்து மதமும் போன்ற தொனிப்பொருட்களில் விரிவுரைகள் கருத்துரைகள் வழங்கப்பட்டது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com