சற்று முன்
Home / செய்திகள் / இந்துக்களின் புனித தலமான திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் சிலரால் விரும்பத்தகாத வன்செயல்

இந்துக்களின் புனித தலமான திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் சிலரால் விரும்பத்தகாத வன்செயல்

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த நுழை வாயில் வளைவு கிறிஸ்தவ மதத்தைப் பின்னபற்றுபர்கள் எனக் கூறப்படுபவர்களால் பலவந்தமாக பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் மன்னாா் மாந்தை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நுழைவாயிலில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்த நுழைவாயில் வளைவினை புனரமைப்பதற்காக ஆலய நிா்வாகம் முயற்சித்திருந்த நி லையில் அங்குவந்த கிறிஸ்தவ மதத்தைப் பின்னபற்றுபர்கள் எனக் கூறப்படுபவர்கள் சிலா் அதனை எதிா்த்திருந்தனா்.

இந்நிலையில் இன்று பிற்பகல் மதபோதகா்கள் முன்னிலையில் குறித்த நுழைவாயில் வளைவு பலவந்தமாக பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றது. இந்த விவகாரம் தொடா்பாக முன்னதாகவே ஆலய நிா்வாகம், இந்து சமய அமைப்புக்கள் மன்னாா் மறைமாவட்ட ஆயாின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இது தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்து வருக்கின்றனா்.

நாளை திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை முன்னிட்டு விசெட வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com