இந்திய யாத்திரிகர்கள் புறக்கணிப்பு – களையிழந்து போன கச்சதீவு திருவிழா

இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான கலாசார விழாவாகக் கொண்டாடப்படும் கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இந்த முறை சோபையிழந்துள்ளது.

தமிழகத்தில் இருந்து எவரும் கச்சதீவுக்கு வருகை தரவில்லை.

கடல் எல்லையில் தமது மீனவர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து கச்சதீவுக்கு வருகை தராது புறக்கணித்துள்ளனர் தமிழக மீனவர்கள்.

குறித்த கூட்டுத்திருப்பலியினை நெடுந்தீவு பங்குதந்தை அருட்சகோதர் நேசராஐ தலைமையில் ஒப்பு கொடுக்கப்பட்டதுடன் அதன்பின் ஆராதனைகளும் இடம்பெற்றன.

இலங்கையில் இருந்து வழக்கம்போல யாத்திரிகர்கள் கடந்த இரண்டு தினங்களாக கச்சதீவை வந்தடைந்தனர்.

குறிகாட்டுவான் துறையில் இருந்து புறப்பட்ட படகுகள் மூலம் அவர்கள் கச்சதீவை வந்து சேர்ந்தவண்ணம் உள்ளனர்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர். வழக்கமாக தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரையிலானோர் நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

அவர்கள் மீன்பிடிப் படகுகளில் வந்து அந்தோனியாரைப் பக்தியோடு தரிசித்துச் செல்வார்கள்.

அதனால் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களின் கலாசார நிகழ்வாக கச்சதீவு கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வந்தது.

இரு பகுதி தமிழ் உறவுகளும் ஒருவரை ஒருவர் நட்புப் பாராட்டிக்கொள்ளவும் அன்பைப் பரிமாறிக்கொள்ளவும் அது களம் அமைத்து வந்தது.

ஆனால் இந்தத் தடவை ஒட்டுமொத்த அன்பும் முறிந்துள்ளதாகத் தாம் உணர்வதாக ஆலயத்துக்கு வந்திருக்கும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலையில் நிகழும் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் திருவிழா நிறைவுக்கு வரும்.

இந்தத் திருப்பலியை வழக்கமாக இலங்கை – இந்தியக் குருமார் இணைந்தே நடத்துவார்கள். போர்க் காலத்தில்கூட தமிழகக் குருமார்கள் வருகை தந்திருந்தனர்.

ஆனால் இன்று காலையில் நடக்க இருக்கும் திருப்பலியை யாழ்ப்பாண கத்தோலிக்க குருமார்களே நிகழ்த்த உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com