இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் 2 படகினில் அத்துமீறி நுளைந்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தமிழகம் இராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள் 12பேர் நேற்று தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலிற்குப் புறப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இவ்வாறு மீன் பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களுமே இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டு காங்காசேன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் முன் ஆஜர் செய்யப்படவுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஏற்கனவே யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 18 இந்திய மீனவர்களும் வவுனியா சாறைச்சாலையில் 8 இந்திய மீனவர்களுமாக மொத்தம் 26 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com