இந்திய மீனவர்கள் 10 பேர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டுவந்த இந்திய மீனவர்கள் 10 பேர்கள் நேற்று(20) இரவு 10.30 நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மீனவர்கள் இன்றைய தினம்(21) யாழ் நீரியல்வளத்திணைக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்கள் இராமேஸ்வரம் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜே.சுதாகர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com