இந்திய மீனவர்கள் அல்லாத வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்க அரசு இரகசிய அனுமதி – மீனவ பிரதிநிதி குற்றச்சாட்டு

இலங்கையின் கடற்பரப்பில் வந்து மீன் பிடித்துச் செல்ல கொரியா, தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளிற்கு மகிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசு இரகசிய அனுமதி வழங்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள கழுத்துறை மீனவர் ஒத்துளைப்பு இயக்கத்தின் மீனவ பிரதிநிதியான கருணாரட்ண அந்த நடைமுறை தற்போதும் தொடர்வதாகவும் அனால் அனுமதி வழங்கப்படாத இந்திய மீனவர்களை மட்டும் கைது செய்து அவர்கள் மட்டுமே அத்துமீறி மீன்பிடிப்பதாக கணக்கை முடித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். https://youtu.be/n9yaqVnKRVQ

கழுத்துறையில் இடம்பெற்ற மீனவ பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பு ஒன்றின் போது வாகீசத்திற்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்திய மீனவர்கள் அத்துமீறுவது மட்டுமே வெளியில் தெரிகின்றது. ஏனெனில் அவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றார்கள். ஏனைய நாட்டவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது குறித்து எவருக்கும் தெரியாது. குறிப்பாக வடக்கில் உள்ளவர்களிற்குத் தெரியாது.
கடந்த அரசு கொரியா, தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் தனக்கு உள்ள நட்புறவு மற்றும் ஒப்பந்தங்கள் காரணமாக அந்த நாட்டு மீனவர்களை இங்கு அத்துமீறி மீன்பிடிக்க அனுமதி அளித்துள்ளது. இதனால்தான் இங்கு பாரிய அளவில் மீன் வளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த அரசும் இதனைக் கண்டு கொள்ளாமல்தான் விட்டுள்ளது.
இந்த மைத்திரி – ரணில் அரசிற்கும் மீனவர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை.
சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கின்றோம் எனும் பெயரில் கடற்கரை விடுதிகளை அமைக்க தனியாரிற்கு அதிகளவில் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அதிகளவில் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடற்கரையில் வள்ளங்களை நிறுத்துவதற்கோ வலை பாய்ச்சுவதற்கோ ஏன் மீன்பிடிப்பதற்குக் கூட அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com