சற்று முன்
Home / செய்திகள் / இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வருடத்திற்கு ஒன்பதாயிரம் மில்லியன் இழப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வருடத்திற்கு ஒன்பதாயிரம் மில்லியன் இழப்பு

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடிப்பதன் காரணமாக வருடத்துக்கு 9000 மில்லியன் இழப்பு ஏற்படுவதாக மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி காரணமாக இலங்கையின் பொருளாதார வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வாரத்துக்கு 6000 தொன் மீன்கள் சட்டவிரோதமாக இந்திய மீனவர்களால் பிடிக்கப்படுகின்றது.

மேலும் ஒவ்வொரு வாரத்திலும் 3 இந்திய சட்டவிரோத படகுகளும் வருடத்துக்கு 5000 க்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைகின்றன. இது இலங்கையின் மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பாதிப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com