இந்திய மீனவரை கடற்படை சுட்டதற்கு எந்த சாட்சியமும் இல்லை – கடற்படைத் தளபதி

இந்திய மீனவர் ஒருவர் கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவ்வாறான துப்பாக்கிச் சூடு ஒன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதற்கான எந்தவொரு சாட்சியும் இல்லை என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த விழாவில் கலந்து கொண்டு ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இது பற்றி தெரிவிக்கையில், அவ்வாறான துப்பாக்கி;ச் சூடு ஒன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதற்கான எந்தவொரு சாட்சியும் இல்லை.

எவ்வாறாயினும், அந்த சம்பவம் தொடர்பாக கடற்படையினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த  கடற்படைத் தளபதி விசாரணைக்கு இந்திய கடலோர காவல்படையினரிடம் தகவல் கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com