இந்திய பொருளாதார வளர்ச்சியால் அண்டை நாடுகளும் பலனடைய வேண்டும்: மோடி பேச்சு

siri_2899434aஇந்திய பொருளாதார வளர்ச்சியால் அண்டை நாடுகளும் பலனடைய வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

இந்திய நிதி உதவியினால் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை காணொளி காட்சி மூலம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பின்னர் மோடி பேசும்போது, “கடந்த ஆண்டு நான் இலங்கை சென்ற போது யாழ்ப்பாண மக்கள் என்னை அன்போடு வரவேற்றது மறக்க முடியாத சம்பவம் ஆகும். யாழ்ப்பாணம் துரையப்பா மைதானம் வெறும் செங்கல் மற்றும் மணலால் கட்டப்பட்ட அல்ல. இந்திய-இலங்கை இரு நாட்டின் ஒருங்கிணைப்பு, உத்வேகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிகளின் அடையாளம் ஆகும். சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க வேண்டும் என ஐ.நாவில் இந்தியா கோரிக்கை வைத்த போது இலங்கைதான் முதன் முதலில் ஆதரவளித்தது. இந்தியா இலங்கையின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி அதன் அண்டை நாடுகளுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறோம்” என்றார்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com