இந்திய ஜனாதிபதி தேர்தல் ராம்நாத் கோவிந்த் முன்னிலை

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத்கோவிந்த் 60,683 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார்.

தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற 25-ந்திகதியுடன் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்திகதி   வாக்கு பதிவு    நடைபெற்றது.

ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா சார்பில் பீகார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் – 17 எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிட்டனர்.

பாராளுமன்ற வளாகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற அலுவலகங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டார்கள். 99 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com