இந்தியா நோக்கி நகர்ந்தது தாழமுக்கம் !

dcb7f21b80a2f58949d721c43d9e5ab7_Lஇலங்கைக்கு மேல் வளிமண்டலத்தில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இந்தியாவை நோக்கி நகர ஆரம்பித்திருப்பதனால் நேற்று(16) பெய்த மழைவீழ்ச்சியினளவு ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் கடந்த இரண்டு தினங்களாக நாடு முழுவதும் பெய்த அடைமழையினால் எட்டுப் பேர் உயிரிழந்திருப்பதுடன், 31,062 குடும்பங்களைச் சேர்ந்த 1,28,428 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெய்த அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 07 மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தன. இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வௌ்ளம், மண்சரிவு, மரம் முறிந்து விழுதல், திடீர் வௌ்ளம், மின்னல் தாக்கம், அதிக மழையுடன் வீசிய கடும் காற்று ஆகிய இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

இயற்கை அனர்த்தம் காரணமாக 1858 குடும்பங்களைச் சேர்ந்த 5,196 பேர் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து 32 தற்காலிக இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களிலும் நடந்த இடி, மின்னல் தாக்கம், மண்சரிவு, வௌ்ளத்தினால் 08 பேர் உயிரிழந்ததோடு 03 பேர் காணாமல் போயிருப்பதாகவும் இருவர் காயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds