இந்தியப் பிரதமர் மோடியின் பெயரில் இலங்கையில் எழுச்சிக் கிராமம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் பெயரில் எழுச்சிக் கிராமமொன்று அமைக்கப்பட்டுவருகிறது.
சமகால அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எழுச்சிக் கிராமம் வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம ரண்மினிதென்ன கிராமத்தில இந்த வீடமைப்புக் கிராமம் அமைக்கப்படுகிறது.
இதில் வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது பெரும்பாலும் பூர்த்தியடைந்துள்ளன. இலங்கையில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின பிரதான வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமரின் பங்கேற்புடன் இந்தக் கிராமம் திறந்து வைக்கப்படும்.
இதில் 217 வீடுகள் உள்ளடங்குகின்றன. நீர், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் காப்பெட் பாதையையும் இந்தக் கிராமம் கொண்டுள்ளன.
கிராமத்தின் விவசாய நடவடிக்கைகளுக்காக நீர்ப்பாசன வசதியும் செய்துகொடுக்கப்படும்.
அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் மிகப்பெரிய கிராமம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com