இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் நடிகர் ரஜினிகாந்த்?!

12 ஆண்டுகளுக்கு பின் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், “அரசியல் போர் வரும்போது களம் இறங்குவோம், தமிழக அரசியல் அடித்தளமே சீர்கெட்டுப்போயுள்ளதாக தனது அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பான கருத்தை கடந்த வெள்ளியன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை ஓ.பி.எஸ் டெல்லியில் சந்தித்த நிலையில் ரஜினிகாந்த்துக்கும் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திபிற்கு பாஜக தரப்பில் இருந்து அணுகியதாகவும் மேலும் இது குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இரண்டு அணிகளாக உள்ள அதிமுக இணையும் பட்சத்தில், ரஜினியையும் சேர்த்து கூட்டணி அமைத்து வரும் தேர்தலை சந்திக்கும் திட்டம் உள்ளது என பாஜகவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பல வியூகங்கள் உலா வரும் நிலையில், வருகின்ற குடியரசுத் தலைவர் தேர்தலின் போது ரஜினிகாந்த் தனது தீவிரமான அரசியல் நகர்வை முன்னெடுப்பார் எனவும் தகவல் பரபரக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com