இது நல்லாட்சியா? – சிவாஜிலிங்கம்

கடந்த ஓராண்டாக நடந்த ஆட்சி நல்லாட்சி அல்ல காட்டாட்சியா என்று மக்கள் சந்தேகப்படுகின்ற அளவிற்கு அரசின் நடவடிக்கைகள் சென்றுகொண்டிருக்கிறது என ரெலோக் கட்சித் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான சிவஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

உலக தமிழராராய்ச்சி படுகொலையின் 42ம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (10) காலை முற்றவெளியிலுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றது. அங்கு நினைவுரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கைக்குள் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாத வேதனையான சூழல் இருக்கிறது. தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் உள்ளவர்களின் சமஸ்டியைக் கண்டு பயப்படுகின்றார்கள் என்றும் வடக்கில் உள்ளவர்கள் ஒற்றைஆட்சியை வெறுக்கிறார்கள் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். இரண்டுக்கும் இடையால் ஓடுகின்ற நிலைமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டிதான் எங்களுடைய ஆகக் குறைந்த கோரிக்கை. அதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com