இது ஒரு எதேட்சை சம்பவம் – நீதிபதி இலக்கில்லை – அவருக்கு இங்கு அச்சுறுத்தலும் இல்லை – பொலிஸ் எஸ்.எஸ்.பி விளக்கம்

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்டது இல்லை. யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,

நிச்சயமான இது நீதிபதியைத் தாக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்படவில்லை. பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் நின்றவரைத் தண்டிப்பதற்காக  முற்பட்டதன் பிரதிபலித்தான் என்று என்னால் தற்போது சொல்ல முடியும்.

நீதவானுக்கு ஏதாவது மரண அச்சுறுத்தல் இருந்தால் நிச்சயமாக அவரது வாகனத்திற்கு சூடு பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை. நீதவானும் வெளியே வந்திருக்கிறார். சார்ஜனும் அந்த குற்றவாளியும் செய்த நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார். அந்தநேரத்தில் நீதவானைச் சுடவேண்டும் என்றால் குற்றவாளியால் நேராக அவரைச் சுட்டிருக்கலாம். அந்தநேரத்தில் துவக்கு குற்றவாளியின் கையிலேயே இருந்தது. ஆனால் அவ்வாறு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. நிச்சயமாக  இது அந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் நடந்த ஒரு விடையமேஒளிய நீதவானுக்கு ஒருவிதமான மரண அச்சுறுத்தலும் யாழ்ப்பாணத்தில் இல்லை என்பது எனக்கு (நான்) விசாரணை மூலம் அறிந்த உண்மை. இன்னும் ஒரு வாரத்திற்குள் நாங்கள் முழுமையான விடையங்களை உங்களுக்கு அறிந்து தருவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com