இதுவரை என்ன செய்தோம் ! மாகாணசபையில் விவாதம்


வட மாகாண சபையின் மூன்றரை ஆண்டுகால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற வட மாகாண சபையின் 98 ஆம் அமர்விலேயே அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபையின் மூன்றரை வருடகால செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான திகதியை ஒதுக்கி தருமாறு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். குறித்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வடமாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடு தொடர்பாக ஆராயலாம். அது ஒரு நாளாகவோ அல்லது 3 நாட்களாகவோ இருக்கும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com