இணையத்தளம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தாக்கல்

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பெண் சட்டத்தரணியின் குடும்ப த்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் யாழ் இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்று மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது கணவர் தொடர்பாக கடந்த புதன் கிழமை (01-06-2016) இணையத்தளங்களில் செய்தி வெளியாகியமை தொடர்பாக குறித்த சட்டத்தரணியின் கணவனால் கடந்த புதன் கிழமை (01-06-2016) இரவு கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய ப்பட்ட து.

குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கினை கடந்த இரண்டாம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்; நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து குறித்த செய்தி வெளியான இணையத்தளம் பற்றிய விபரங்கள் தொடர்பான அறிக்கையினை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் மூலம் அறிக்கை பெற்று மன்றுக்கு சமர்;பிக்குமாறு எதிர்வரும் 15ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த இணையளத்தளத்தின் செய்தி தொடர்;பான விசாரணைகளை நீதிமன்றினூடாக விசேட குற்றத்தடுப்பு பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கிளிநொச்சி ப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பெண் சட்டத்தரணியிடம் கேட்ட பொழுது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் யாரோ திட்டமிட்டு இவ் பொய்யான செய்தியை பிரசுரித்து உள்ளதாகவும் குறித்த இணையத்தளத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற ஆடைத்தொழிற் சாலையில் எனது கணவன் சாரதியாக பணி புரிவதாகவும் அவர் அங்கு வேலை செய்யும் பென்னோருவருடன் தப்பாக நடந்து கொண்டதாக எனக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்

அவர் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சியில் இயங்குகின்ற எந்த ஆடைத்தொழிற் சாலைக்கும் எனது கணவருக்கும் எவ்வித தொடபுமில்லை அத்தோடு எமது குடும்பத்திற்கே தொடர்பு கிடையாது எனவும் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யவேண்டிய தேவை எனது கணவருக்கு இல்லை எனவும் இவ் போலி இணையத்தளத்திற்கு மிக விரைவில் சட்டம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com