‘இணக்க அரசியலில் கிடைத்தது இது தானா?’ – யாழில் சுவரொட்டிகள்

13494902_1558686101100692_1721622169483770683_n

‘இணக்க அரசியலில் கிடைத்தது இது தானா?’ என எழுதப்பட்டு யாழ். நகரை அண்டிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. திங்கட்கிழமை (27) காலை முதல் அவை, நகரின் சில வீதிகளில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
கடந்த வாரம், யாழ். துரையப்பா விளையாட்டரங்க திறப்பு விழாவிற்கு யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் மகளின் பிறந்த தின வைபவத்தில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தார். இச்சம்பவம், தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.image3313551127_1363320733683280_1038376392_n
ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் போது, ஆறு மாதத்தினுள் பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டிருந்த வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் ஏதேனும் அறிவிப்பினை விடுவிப்பார் என எதிர்பார்த்திருந்த மக்கள், ஜனாதிபதியின் உரையில் அது குறித்து எதுவும் தெரிவிக்கப்படாமையால் பலத்த ஏமாற்றத்தை அடைந்தனர்.
இந்நிலையில், யாழில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டதும், வலி. வடக்கு மீள்குடியேற்றம் பற்றி மக்கள் சார்பில் கதைக்க வேண்டிய, பிரதிநிதியின் வீட்டிலேயே அது இடம்பெற்றதும், அதில் த.தே.கூ. பிரதிநிதிகள் கலந்து கொண்டதும் மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டதுடன், கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையிலே பிறந்தநாள் விழா புகைப்படத்துடன் கூடிய சுவரோட்டிகள் யாழ் நகரப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.13552530_1363320800349940_73858599_n13516331_1558686107767358_9112330062078854278_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com