இடம்பெயர்ந்தோர் முகாம்களை மூன்று மாதத்தில் முழுமையாக மூடுவேன் – ஜனாதிபதி

maithripala-sirisenaவட மாகாணத்தில் காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதத்தினுள் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி கூறினார்.

வடக்கில் இருக்கின்ற அகதி முகாம்களும் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டு மக்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

தங்களது சொந்த காணிகளை தரவேண்டுமெனக் கோரி வடக்கில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்துகிறார்கள் இந்தப் பிரச்சினைக்கு மூன்று மாத காலத்தினுள் தீர்வுகாண முடியும். படையினரிடம் இருந்த காணிகளையும் கட்டம் கட்டமாக நாம் வழங்கி வருகிறோம். காணிகளை அடையாளம் காண்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. நில அளவையாளர்கள் செல்வதில் பிரச்சினை இருக்கிறது.

சில இடங்களில் நில அளவையாளர்கள் செல்லும் போது இராணுவ முகாம் அமைக்க அளவிடுவதாககூறி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். உண்மையில் அந்த மக்கள் தங்களது சொந்தக் காணிகளைத்தான் கேட்கிறார்கள். படையினரின் காணிகளைக் கேட்கவில்லை. அவர்களின் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் அர்த்தம் இருக்கிறது. நியாயமானதும் கூட. என்றாலும் மூன்று மாத காலத்தினுள் இதற்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கூறினார். வவுனியா பிரதேசத்தில் படை வசம் இருந்த கலாசார மத்திய நிலையம், கூட்டுறவுச் சங்க கட்டடம் எல்லாம் வழங்கப்பட்டுவிட்டது.

பான் கீ மூனின் வருகையோடு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றனவே? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, ஐ. நா. செயலரின் வருகையோடு இன்னும் கூடுதல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாமென நான் எதிர்பார்த்தேன் என்றாலும் அதனை விடவும் குறைவாகத்தான் நடந்துள்ளது.

பரவாயில்லை, அவர்களின் காணிப் போராட்டங்களில் நியாயம் இருக்கிறது. சிலர் சொந்த இடம் கேட்கின்றனர். இன்னும் சிலர் அரச காணிகளை வழங்குமாறும் கேட்கின்றனர். மூன்று மாதங்களில் அதற்கு தீர்வு காண முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com