இசைப்பிரியா பற்றிய படத்துக்கு தடை : பின்னணி காரணம் !

(பதிவு செய்த நாள் – செப்டம்பர் 13, 2015, 06.23 PM)  போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சியை நீக்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்ததால் மீண்டும் படத்துக்கு அனுமதி சான்றிதழ் கொடுக்க மறுத்து, படத்துக்கு மத்திய தணிக்கை குழு தடை விதித்து விட்டார்கள் படத்தின் இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, படையினரால் கொடூரமாக சிதைக்கப்பட்டதை கருவாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். கு.கணேசன் இயக்கத்தில், குருநாத் சலதானி தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்து இருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் கு.கணேசன் கூறுகையில், “என் பூர்வீகம் தமிழ்நாடு. வசிப்பது பெங்களூருவில். 6 கன்னட படங்களை டைரக்டு செய்திருக்கிறேன். முதன்முதலாக நான் டைரக்டு செய்த தமிழ் படம், ‘போர்க்களத்தில் ஒரு பூ’. இலங்கையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை உலகுக்கு காட்டும் விதமாக ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை இயக்கினேன்.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் என்னை இந்த படத்தை இயக்க தூண்டியது. இந்த படத்தை முதன் முதலாக கடந்த மே மாதம் தணிக்கைக்கு அனுப்பினேன். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தை திரையிட அனுமதி மறுத்தார்கள். அதைத்தொடர்ந்து படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பினேன். மறுதணிக்கை குழுவின் தலைவராக இருந்த எஸ்.வி.சேகரும், தமிழ்நாடு தணிக்கை குழு அதிகாரி பழனிச்சாமியும் படத்தை பார்த்துவிட்டு, அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள்.

அதன்பிறகு படத்தை டெல்லிக்கு அனுப்பினேன். அங்கு சில காட்சிகளை நீக்க சொன்னார்கள். அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் அனுமதி கோரி படத்தை அனுப்பினேன். இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சியை நீக்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்ததால் மீண்டும் படத்துக்கு அனுமதி சான்றிதழ் கொடுக்க மறுத்து, படத்துக்கு தடை விதித்து விட்டார்கள்.

இந்த படம், தமிழ் ஈழத்தை நியாயப்படுத்துவதாக-விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக இருப்பதாகவும், படத்தை வெளியிட்டால் இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும் என்றும் தணிக்கை குழுவினர் கூறுகிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து இருக்கிறேன்” என்று கூறினார்.

நெடுந்தீவில் ரூபா 45 இலட்சம் மாகாண நிதி ஒதுக்கீட்டில் முறைசாராக் கல்வித் தொழிற்திறன் பயிற்சி நிலைய திறப்பு!

வடமாகாண கல்வி அமைச்சின் 2016 ஆம் ஆண்டிற்குரிய மாகாணம் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி (PSDG) ஒதுக்கீட்டின் மூலம் நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க.பாடசாலை வளகாத்தில் தீவக கல்வி வலயம் முறைசாராக் ...

Read More »

பத்திரிகையாளர்களை விமர்சித்த வழக்கு : நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராகததால் நடிகர்கள் சூர்யா சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து ...

Read More »

22 பேர் பலியான பிரிட்டன் குண்டுத்தாக்குதல் – தேடுதல் வேட்டை தொடர்கிறது

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க ...

Read More »

இப்படியும் நடக்கிறது ! – யாழில் நடந்த ஒரு வழக்கு !!

ஆனைக்கோட்டைப் பகுதியில் 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட்மாதம் 23 வயதுடைய இளைஞன் தனது காதலியான 16வயதுப் பெண்ணுடன் தலைமறைவானார். இதனால் அவர்மீது கடத்தல் மற்றும் வன்புணர்வு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ...

Read More »

திருட்டு மீள்நிரப்ப அட்டைகள் விற்றதாக இருவர் கைது

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்வெல நகரில் குறைந்த விலைக்கு கையடக்க தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகளை விநியோகித்த இருவரை இன்று (22) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான ...

Read More »

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை உடன் நிறுத்துக – தமிழ் சிவில் சமூக அமையம்

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பாகங்களில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பாக நாம் ஆழ்ந்த கரிசனை கொள்கின்றோம். இவ்வன்முறைகள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர சட்ட ஒழுங்கைப் பேணுவதற்கான ...

Read More »

மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் வித்தியா கொலை வழக்கு யாழிலேயே நடைபெறும்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ் மேல் நீதிமன்றிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய ட்ரல் அட்பார் முறையில் குறித்த ...

Read More »

கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு – சி.சி.ரி.வி ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை !

ஊர்காவற்றுறை – சுருவில் பகுதியில் ஞானசேகரம் மேரி ரம்சிகா என்கிற கர்ப்பிணிப் பெண் கடந்த ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் ...

Read More »

பூநகரியில் மக்களை விட ஆமி அதிகம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி பிரதேசத்தில் உள்ள மக்கள் தொகையை விட இராணுவத்தின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடக்கில் ...

Read More »
vakeesam Like Page close[x]
Or wait 30 seconds