ஆவாக் குழுக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை!-றெஜினோல்ட் கூரே

தென்னிந்தியச் சினிமாவின் தாக்கத்தினால் உருவாகியதே ஆவாக் குழு எனவும் அக்குழுவுக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லையென வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாக் குழு தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வெளிநாடுகளிலிருந்து நிதி கிடைக்கும் இளைஞர்கள் சிலர் இந்தியாவின் சினிமாவினால் தாக்கமடைந்தே இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.

தமிழ்மக்கள் தமது உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கும்வேளையில், அதற்குச் சமாந்தரமாக இக்குழு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றது.

வெளிநாட்டிலுள்ள சில அமைப்புக்கள் வடமாகாணத்தில் அமைதியற்ற சூழலையே விரும்புகின்றனர். இவ்வமைப்புக்களால் இக்குழுவுக்கு நிதியுதவி வழங்கப்படுகின்றதா என்பதை பாதுகாப்புத் தரப்பினர் தான் விசாரணை செய்து அறியவேண்டுமெனவும்தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com