ஆவணக் குளறுபடி – வடக்கு தொண்டராசிரியர் நியமனத்தில் சிக்கல்

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நியமனத்தின் அனுமதியில் மத்திய அரசின் முக்கிய கோரிக்கை ஒன்றின் அடிப்படையில் பலர் தமது சந்தர்ப்பத்தினை இழக்கும் நிலமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவிய ஆசிரயர் வெற்றிடங்களிற்கு பொருத்தமான ஆசிரியர்கள் இல்லை என்பதன் அடிப்படையில் என தொண்டராசிரியர்களாக பணியாற்றிய 1079 தொண்டர்களிற்கு கடந்த யூன் மாதம் 28,29,30 ஆகிய மூன்று தினங்களும் வட மாகாண கல்வி அமைச்சில் மத்திய கல்வி அமைச்சின் அதிகாரிகளினால் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது.
இவ்வாறு நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் 1079 பேர் தோற்றியிருந்த நிலையில் சுமார் 500 பேருக்கான நியமன வாய்ப்புக்கள் இருந்த நிலையில் தொண்டர்களின் போரிக்கையின்போது அப்போது வட மாகாண கல்வி அமைந்த விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய 672 பேருக்கு நியமனம் வழங்க மத்திய கல்வி அமைச்சு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருந்த்து.
ஆனால் தற்போது நேர்முகத் தேர்வின் பெறுபேற்றின் அடிப்படையில் புதியதோர் நடைமுறைச் சிக்கல் கானப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நேர்முகத் தேர்விற்கான ஆவணங்களில் ஒன்றாகவும் முக்கிய ஆவணமாகவும் கருதப்பட்ட பாடசாலைகளின் சம்பவ திரட்டுப் புத்தகத்தின் பிரதியை இணைக்க பெருமளவிலான தொண்டர்கள் தவறிவிட்டதன் அடிப்படையிலேயே புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சம்பவ திரட்டுப் புத்தகத்தின் ( லொக் புக் ) பிரிதியனை குறித்த நேர்முகத் தேர்வாளர்களில் சுமார் 200 பேர் மட்டுமே சமர்ப்பித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஏனையோரை சட்டத.தின்பிரகாரம் உறுதி செய்ய முடியாத நிலமையில் நேர்முகத் தேர்வாளர்கள் குழப்பகரமான அறிக்கையினையே சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் குறித்த தொண்டராசிரியர்களிற்கான நியமனம் வழங்குவதில் மேலும் காலதாமதம் ஏற்படுகின்றதாக கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் தொண்டராசிரியராக பணியாற்றுவதாக உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கியபோதும் சம்பவத் திரட்டில் பதிவு இல்லாத அதிபர்களின் பெயர்விபரங்களும் தற்போது தனியாகத் திரட்டப்படுவதனால் இவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது .
இதேநேரம் தொண்டர்களாக பணியாற்றுவதாக உறுதிப்படுத்தல் கடிதங்கள் வழங்கும்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஓர் அதிபர் மட்டும் 12 பேருக்கும் பிற அதிபர்கள் 11, 9 என அதிக எண்ணிக்கையில் வழங்கியது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com