சற்று முன்
Home / செய்திகள் / ஆளுநர் சுரேனுக்கு வரலாறு தெரியாது – பலாலி படைத்தளத்தில் வகுப்பெடுத்த மாவை

ஆளுநர் சுரேனுக்கு வரலாறு தெரியாது – பலாலி படைத்தளத்தில் வகுப்பெடுத்த மாவை

யாழ்ப்­பா­ணம்,  காங்­கே­சன்­து­றைச் சிமெந்­துத் தொழிற்­சா­லையை ஆரம்­பிப்­ப­தற்கு கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வரே தடை­யாக உள்­ளார் என்று வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வன் கூறி­யி­ருப்­பா­ரா­யின் அவர் வர­லாறு தெரி­யா­த­வர்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்­ளார்.

பலாலி வானூர்­தித் தளத்­தைப் பன்­னாட்­டுத் தரம் வாய்ந்த வானூர்தி நிலை­ய­மாக மாற்­றும் அபி­வி­ருத்­திப் பணி­க­ளின் ஆரம்ப நிகழ்வு நேற்­றுப் பலா­லி­யில் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­வித்­த­போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­தா­வது-

சீமெந்து தொழிற்­சாலை தொடர்­பாக இன்று ஒரு செய்தி பார்த்­தேன். சிமெந்­துத் தொழிற்­சாலை மீண்­டும் இயங்­கு­வ­தற்கு நாங்­கள் தடை­யாக இருக்­கி­றோம் என்று ஆளு­நர் சொன்­னார் என்று கேள்­விப்­பட்­டேன். பத்­தி­ரி­கைச் செய்தி சரியோ பிழையோ தெரி­யாது. ஆளு­நர் அவ்­வாறு கூறி­யி­ருந்­தால் அவ­ருக்கு வர­லாறு தெரி­யாது என்றே நினைக்­கின்­றேன்.

2016ஆம் ஆண்டு புதிய ஆட்சி வந்­த­தன் பின்­னர் இரா­ஜ­ரா­ஜேஸ்­வரி அம்­மன் ஆல­யத்­தில் பொங்­க­லுக்கு தலைமை அமைச்­சர் வந்­தி­ருந்­தார். அப்­போது பலாலி விமான நிலை­யத்­தில் பன்­னாட்டு விமான நிலை­யம் ஒன்றை ஆரம்­பிக்­க­வேண்­டிய அவ­சி­யம் இருக்­கி­றது, அங்கு பன்­னாட்டு விமான நிலை­யம் அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என்று நாம் கேட்­டி­ருந்­தோம். தொடர்ச்­சி­யா­கக் கேட்­டு­வந்­தோம். இந்­தியா அதைச் செய்து தர­வேண்­டும் என்­றும் கேட்­டி­ருந்­தோம். இரா­ஜ­ரா­ஜேஸ்­வரி ஆல­யத்­தில் அடுத்­த­தாக நாங்­கள் எடுத்த தீர்­மா­னம் சிமெந்­துத் தொழிற்­சா­லையை மீள ஆரம்­பிக்க வேண்­டும் என்­ப­து­தான்.

சீமெந்து தொழிற்­சாலை மிக மோச­மாக அழிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதை மீண்­டும் இயங்க வைப்­ப­தில் எமக்கு பாத­கங்­கள் பல இருக்­கின்­றன. ஏற்­க­னவே நிலத்­தடி நீர் மிக மோச­மா­கப் பாதிக்ப்­பட்­டுள்­ளது. அத­னால் சுண்­ணாம்­புக் கற்­களை அக­ழ­மு­டி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தைக் கூறி­யி­ருந்­தோம். கிளி­நொச்சி கிராஞ்­சி­யில் நிலம் ஆரா­யப்­பட்­டது.

இப்­பொ­ழுது மன்­னா­ருக்­குச் செல்­கின்ற வழி­யில் மடு­மா­தா­வுக்கு மேற்­குப் பக்­க­மாக பரப்­புக்­க­டந்­தான் எனும் இடத்­தில் சிமெந்­துத் தொழிற்­சாலை ஒன்றை நிறு­வு­வ­தற்­கா­கச் சுண்­ணாம்­புக் கற்­பா­றை­கள் ஆரா­யப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

சீமெந்­துத் தொழிற்­சா­லைக்­கு­ரிய நிலம் கிட்­டத்­தட்ட 330 ஏக்­க­ரில் தொழில் மையத்­தைத் சார்ந்த துறை­களை ஆரம்­பிப்­ப­தற்கு அமைச்­ச­ர­வைக்­குப் பத்­தி­ரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. கடற்­ப­டை­யி­ன­ருக்­கும், இரா­ணு­வத்­தி­ன­ருக்­கும் ஒரு தொகுதி நிலம் வேண்­டும் என்­ற­போது அதை அடை­யா­ளம் காட்ட வேண்­டும் என்று அந்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­திலே நாங்­கள் கேட்­டி­ருக்­கி­றோம். அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை முன்­வைப்­ப­தில் தாம­தம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. நாங்­கள் சிமெந்து தொழிற்­சா­லையை தொடங்­கு­வ­தற்கு தடை­யாக இருக்­கி­றோம் என்­பது உண்­மை­யல்ல. ஆளு­ந­ருக்­குத்­தான் வர­லாறு தெரி­யா­மல் இருக்­கி­றது.- என்­றார்.

வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வ­னின் ஏற்­பாட்­டில் நேற்­று­முன்­தி­னம் பாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் இடம்­பெற்ற வட்­ட­மேசை கலந்­து­ரை­யா­ட­லில் வடக்கு மாகாண பொரு­ளா­தா­ரம் பற்றி ஆரா­யப்­பட்­டது.

சிவில் அமைப்­பைச் சேர்ந்த ஒரு­வ­ரால் காங்­கே­சன்­து­றைச் சீமெந்து தொழிற்­சா­லையை மீள ஆரம்­பிப்­பது தொடர்­பில் ஆளு­ந­ரி­டம் கேட்­கப்­பட்­டது. அதற்­குப் பதி­ல­ளித்த ஆளு­நர் தான் அதை ஆரம்­பிப்­ப­தற்கு தயா­ராக உள்­ளேன் என்­றும், அதை ஆரம்­பிக்க விடாது கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வரே தடை­யாக உள்­ளார் அவ­ரி­டம் போய்க் கேளுங்­கள் என்று கூறி­யி­ருந்­தார் என்று தக­வல்­கள் வெளி­வந்­தி­ருந்­தன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com