ஆளுநர் அலுவலகத்தின் முன் இலங்கையின் அரசியல் யாப்பினை தீ மூட்டி எரிப்பேன் – சிவாஜி சபதம்

மாகாண சபையால் ஆளுநருக்கு கோரிக்கை விடும் வகையில் பிரேரணை நிறைவேற்ற முடியாது என ஆளுநர் கூறுவராயிருந்தால் அவரது அலுவலகத்தின்முன் இலங்கையின் அரசியல் யாப்பினை தீ மூட்டி எரிப்பதற்குத் தயங்கமாட்டேன் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

வடக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்படும் பிரேணை தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கோரிக்கை விட முடியும் என்றால் ஏன் ஆளுநருக்கு அவ்வாறு கோரிக்கைவிட முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வடக்கு மாகாண சபையின் 89 ஆவது அமர்வு இன்றையதினம் கைதடியிலுள்ள மாகாண சபையில் நடைபெற்றது. அங்கு பிரேரணை ஒன்றிற்கு பதிலளித்து உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் தவராஜா இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் பிரேணை ஒன்றினை ஆளுநருக்கு கோரிக்கை விடுப்பதாக நிறைவேற்றுவதற்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்திருந்த நிலையில் அதற்குப் பதிலளித்து உரையாற்றியபோதே சிவாஜிலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com