ஆறு தசாப்­த­ வழக்­கத்­தி­னையே நானும் பின்­பற்­றி­யுள்ளேன் –  மக்­களை திசை திருப்­பவே பிர­சாரம் என்­கிறார் வட­மா­காண கல்வி அமைச்சர்

தேசி­யக்­கொ­டியை நான் அவ­ம­திக்­க­வில்லை. தேசியக் கொடியை அவ­ம­திப்­பதே அர­சி­ய­ல­மைப்பு மீற­லாகும். அறு­பது வரு­டங்­க­ளாக தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் செயற்­பட்டு வந்­ததன் அடிப்­ப­டை­யி­லேயே நானும் நடந்­து­கொண்டேன் என்று வட­மா­காண கல்வி அமைச்சர் க.சர்­வேஸ்­வரன் தெரி­வித்தார்.

நான் தேசியக்கொடியை ஏற்ற மறுத்­த­மையால் பாரிய சல­ச­லப்பு உரு­வா­ன­தாக அர­சியல் உள்­நோக்­கத்­துடன் பிர­சா­ரங்­களை பூத­ாக­ர­மாக்­கி­யுள்­ள­தாக குற்றம் சாட்­டிய மாகாண கல்வி அமைச்சர் சர்­வேஸ்­வரன், நாட்­டி­லுள்ள பிர­தான விடயங்­க­ளி­லி­ருந்து மக்­களை திசை­தி­ருப்பும் ஒரு நட­வ­டிக்­கையே இது­வாகும் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.
வவு­னியா பரக்­கும்பா மகா­ வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் பங்­கேற்­றி­ருந்த வட­மா­காண கல்வி அமைச்சர் க.சர்­வேஸ்­வரன் தேசியக்கொடியை ஏற்­ற­ ம­றுத்­தமை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க, எதிர்க்­கட்சி பிர­தம கொறடாவான அநு­ர­கு­மார திஸா­ந­யக்க எம்.பி.ஆகியோர் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். அதே­நேரம் பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளியிலும் இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக பலத்த விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. அவ்­வா­றான நிலையில் அச்­சம்­பவம் குறித்து வட­மா­காண கல்வி அமைச்சர் க.சர்­வேஸ்­வரன் தனது கருத்­துக்­களை தெரி­விக்கும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்கை தேசியக் கொடி­யா­னது சிங்­கள பௌத்த மேலா­திக்­கத்தின் வெளிப்­பா­டா­கவே உள்­ளது. இதன் கார­ண­மா­கவே தந்தை செல்­வ­நா­யகம் முதல் எமது முன்னைய தலை­வர்கள் எவரும் இக்­கொ­டி­யினை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை. குறிப்­பாக 2012ஆம் ஆண்டு யாழில் நடை­பெற்ற பொது எதி­ர­ணி­களின் மேதின நிகழ்வில் தற்­போது எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராக இருக்கும் சம்­பந்தன் தேசியக்கொடியை கையில் ஏந்­தி­ய­மைக்கு எதி­ராக கடு­மை­யான சர்ச்­சைகள் எழுந்­தன.

அதன்­கா­ர­ண­மாக அதற்கு அண்­மித்த தினத்தில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராஜா பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோரி­யி­ருந்தார். பிறி­தொரு சந்­தர்ப்­பத்தில் சம்­பந்­தனும் தான் சிங்கம் காளி அம்­மனின் வாகனம் என்­பதன் கார­ணத்தால் தான் அக்­கொ­டியை ஏந்­தி­ய­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மேலும் எனக்கு முன்னர் கல்வி அமைச்­ச­ராக இருந்த குரு­கு­ல­ராஜா இந்­தப்­பா­ட­சா­லையில் ஏற்­க­னவே நிகழ்­வு­களில் பங்­கேற்­றி­ருக்­கின்றார். அவரும் தேசியக் கொடியை ஏற்­றி­யி­ருக்­க­வில்லை. வட­மா­காண முத­ல­மைச்­சரும் தேசியக் கொடியை ஏற்­ற­வில்லை. வடக்கு மாகா­ணத்தில் உள்ள மக்கள் பிர­தி­நி­திகள் பொது நிகழ்­வு­களில் கலந்து கொள்ளும் பட்­சத்தில் அர­ச சே­வையில் ஈடு­பட்­டுள்ள அர­சாங்க சேவை ஊழி­யர்­களால் தேசியக் கொடியும், பாட­சா­லை­க­ளென்றால் அதன் அதி­பர்­களால் பாட­சாலைக் கொடியும் நிறு­வ­னங்கள், திணைக்­க­ளங்கள் என்றால் அந்­தந்த நிறு­வன, திணைக்­க­ளங்­களின் தலை­வர்­களால் அவற்­றுக்­கான கொடி­களும், வட­மா­காண சபைக்­கு­ரிய கொடி காணப்­பட்டால் அதனை என்­போன்ற அமைச்­சர்கள், உறுப்­பி­னர்கள், முத­ல­மைச்சர் ஆகியோர் ஏற்­றி­வைப்­பதே வழ­மை­யாக கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பின்­பற்­று­கின்­ற­போதும் இவ்­வாறு தான் நிலைமை இருக்­கின்­றது. அந்த நடை­மு­றை­யினைத் தான் நானும் பின்­பற்­றினேன்.

 

அன்று நடந்­தது இதுதான்.

இந்­நி­லையில் குறித்த பாட­சா­லையில் நிகழ்­வொன்­றுக்­காக என்னை அழைத்­தி­ருந்­தார்கள். அது உப­க­ர­ணப்­பொ­ருட்கள் வழங்கும் நிகழ்­வொன்­றாகும். அதன்­போது அங்கு தேசியக் கொடி ஏற்­று­வ­தற்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதே­நேரம் வட­மா­காண சபைக்­கான கொடி காணப்­ப­டா­த­தோடு புதி­­தாக பௌத்த கொடி­யொன்றை ஏற்­று­வ­தற்கும் வைத்­தி­ருந்­தார்கள்.

இச்­ச­ம­யத்தில் நான் பாட­சாலை அதி­பரை அழைத்து தேசியக் கொடியை ஏற்­று­மாறு கோரினேன். என்­னுடன் இருந்த சக உறுப்­பினர் ஜெய­தி­லக்­கவை அழைத்து பௌத்த கொடி­யினை ஏற்­று­மாறு கோரினேன். இதன்­போது யாரும் சல­ன­ம­டை­ய­வில்லை. அங்கு சர்ச்­சைகள் நடை­பெற்­றி­ருக்­க­வில்லை. நிகழ்வு அமை­தி­யா­கவே நடை­பெற்­றது. ஆகவே என்னை அழைத்­த­போது நான் மறுத்தேன். சர்ச்­சைகள் இடம்­பெற்­றன என்று கூறு­வ­தெல்லாம் உண்­மைக்குப் புறம்­பான விட­ய­மாகும்.

அர­சியல் உள்­நோக்கம்
இந்த நிகழ்வு நிறை­வ­டைந்த பின்னர் நாம் அனை­வரும் அருகில் இருந்த பௌத்த விகா­ரைக்­குச்­சென்றோம். அங்கு சமய நிகழ்வு நடை­பெற்­றி­ருந்­தது. அதன்­போது புத்­த­ருக்கு பிரார்த்­தனை செய்து மலர் வைத்து வழங்­கி­னார்கள். அதில் நானும் ஈடு­பட்­டி­ருந்தேன். அதனை ஏன் இவர்கள் பேச­வில்லை? அந்த விட­யத்­தினை ஏன் யாரும் சுட்­டிக்­காட்­ட­வில்லை?
இவை அனைத்­தையுமே அர­சியல் உள்­நோக்கம் கொண்ட செயற்­பா­டு­க­ளா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. தென்­னி­லங்­கையில் அர­சியல் பிர­சா­ரத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஒரு உபா­ய­மாக இந்த விடயம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. நாட்டில் உள்ள பிர­தான பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து மக்­களை திசை திருப்பி தமது தேர்தல் அர­சி­யலை நகர்த்­து­வ­தற்­கான வழி­மு­றை­யா­கவே இதனை பார்க்க வேண்­டி­யுள்­ளது.
நாங்கள் சிங்­கள பௌத்த மேலா­திக்­கத்­தினை முழு­மை­யாக எதிர்க்­கின்றோம். நாம் பௌத்த மதத்­திற்கோ சிங்­கள மக்­க­ளுக்கோ எதி­ரா­ன­வர்கள் அல்லர். அவ்­வா­றி­ருக்­கையில் தான் நாம் இன­வாத அடிப்­ப­டையில் தேசியக் கொடி­யினை ஏற்­ற­வில்லை என்ற பிர­சாரம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

சம­ர­சிங்­கவின் தவ­றான கூற்று
இவ்­வா­றி­ருக்­கையில் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க அதி­கா­ரங்கள் பகிர்­வது பாதிப்­பாகும் என்ற தொனிப்­பொருளில் இந்த சம்­ப­வத்­தினை மையப்­ப­டுத்­திய கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். இது உண்­மை­யி­லேயே மொட்டைத்­த­லைக்கும் முழந்­தா­ளுக்கும் போடும் முடிச்­சா­கவே இருக்­கின்­றது.
அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பாக பேசப்­ப­டு­கின்ற ஒவ்­வொரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் அதனுள் தேசியக் கொடி விவ­கா­ரமும் உள்­ள­டங்­கு­கின்றது என்­பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்­பாக தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்ற 13ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் இருக்­கின்­றன. அவற்றை நடை­மு­றைச்­சாத்­தி­ய­மாக்­கு­வ­தற்கு கூட இவர்­க­ளுக்கு உடன்­பா­டில்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.
அவ்­வா­றி­ருக்­கையில் என்னை மையப்­ப­டுத்தி எவ்­வாறு அதி­கா­ரங்­களை வழங்க அச்­ச­மாக இருக்­கின்­றது என்று கூற­மு­டியும்? இவை­யெல்லாம் அர­சியல் கலந்த வேடிக்­கை­யான கருத்­துக்­களே.

மேலும் இலங்கை ஒரு பல்­லின, பல­மொழி, பல மதங்கள் கொண்ட நாடு என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். அந்­தந்த இனங்­க­ளுக்­கான அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­கின்ற வகை­யி­லான அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்­டி­ருப்­பது அவ­சி­ய­மா­கின்­றது. இந்த விட­யங்கள் இந்­திய–இலங்கை ஒப்­பந்தத்­திலும் தெளிவாக கூறப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆகவே அது முற்­றாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில் அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாது சிங்­கள பௌத்த மேல­ாதிக்­கத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்­து­வது யார் என்­பது தொடர்பில் தெளிவ­டைய வேண்­டி­யுள்­ளது.

அநு­ர­கு­மா­ர­விற்கு பதில்
வடக்கில் யார் கூடிய இன­வாதி என்­பதில் போட்­டி­யேற்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்ள மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­த­ம­கொ­ற­டா­வு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க எம்.பி. வட­மா­காண கல்வி அமைச்சர் அர­சி­ய­ல­மைப்­பினை மீறி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­பா­னது தமிழ் மக்­களின் பங்­க­ளிப்­புடன் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தொன்­றல்ல. அதனை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்­பது முத­லா­வது விடயம். அதே­நேரம் அமைச்சர் என்ற வகையில் நான் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்­டாலும் அர­சி­ய­ல­மைப்பில் தேசியக் கொடி சம்­பந்­த­மான பகு­தியில் தேசி­யக்­கொ­டியை அவ­ம­திக்­கின்­ற­மையே தவறு எனக் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. கொடி­யேற்­று­வ­தற்கு மறுப்­ப­ளிக்­கின்­றமை தவ­றாக கூறப்­ப­ட­வில்லை. குற்­ற­மா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வில்லை. ஆகவே எனது செயற்­பாடு அர­சி­ய­ல­மைப்பை மீறும் செய­லல்ல. மேலும் ஆறு தசாப்­தங்­க­ளாக தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களின் செயற்­பா­டு­க­ளி­னையே நானும் பின்­பற்­றி­யுள்ளேன்.

மேலும் தேசியக் கொடி சம்­பந்­த­மாக மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டி­ருந்த கடந்த கால நிலைப்­பா­டுகள் தொடர்பாக அவர்கள் மீளவும் நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு கட்சியானது இரண்டு நிலைப்பாடுகளை கொண்டிருக்க முடியாது. ஆகவே அவர்கள் இதற்கு முன்னர் கொண்டிருந்த நிலைப்பாடானது தற்போது கொண்டிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆகவே அது தொடர்பாக அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இது மட்டுமன்றி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் அரசியலமைப்பினை பாதுகாப்போம் என்று தான் பிரசாரம் செய்கின்றார்கள்.ஆனால் தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லையா? முன்னெடுக்கின்றார்களே? அப்படியாயின் அதனையும் அரசியலமைப்பினை மீறும் செயல் என்று கூறமுடியுமா?

ஆகவே இவை எல்லாம் வாதவிவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய விடயங்களாக இருக் கையில் எம்மைப்பொறுத்தவரையில் இதுவொரு வழமையான விடயம். ஆனால் இந்த விடயத்தினை தற்போது பூதாகரமாக்கி நாட்டு மக்களை வேறு திசைக்கு கொண்டு சென்றுவிட்டு தேர்தலை முகங்கொடுப்ப தற்கான ஒரு சூழ்ச்சியாகவே பார்க்க வேண் டியுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com