ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர்  ஆகியோர் தலைமையில், 18.03.2016  அன்று சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஆரம்பமாகியது.
இலங்கை அரசின் உதவியுடன் நடைபெறும் இம்மாநாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் பெம்பென்க் சுஸஸன்டோனோ ஆரம்ப உரையாற்றினார்.
ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளின் ஆலோசனையின் பேரில்  2010ஆம் ஆண்டு ஆரம்பமாகிய ஆசிய அபிவிருத்தி மாநாடானது, 2010ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. கடந்த மாநாடனது  கொரியா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கிடையில் 2014ஆம் ஆண்டு நடைபெற்றது.
இன்று கொழும்பில் ஆரம்பமாகும் ஆசிய அபிவிருத்தி மாநாட்டில் ஆசிய நாடுகளின் கடன் வழங்கும் நிறுவனங்கள், உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் மற்றும் அரச நிறுவன பிரதானிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds