ஆறாம் திகதி அவசரமாகக் கூடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பத் தொடர்பில் உபகுழுவின் அறிக்கை எதிர்வரும் 9, 10, 11ஆம் திகதிகளில், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கக்கூடும் என அஞ்சப்பட்டுவந்த சூழலில் கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை உடனடியாக நடாத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்த நிலையில் எதிர்வரும் 06 ஆம் திகதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

.6ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி கலந்தாலோசிக்கவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு, சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் சுட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அழைப்பு விடுக்கப்படுவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்புத் திட்டம், உப குழு அறிக்கை தொடர்பான மூன்று நாட்கள் விவாதம், ஆகியன தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com