ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 127 பேர் வேட்புமனு தாக்கல்!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், 127 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர் என்று, தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில், சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும், தி.மு.க சார்பில் மருதுகணேஷும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயமும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில், தீபாவும் போட்டியிடுகின்றனர்.

கடந்த மார்ச் 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில், சுயேச்சைகள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்செய்தனர். நேற்று, தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் வேட்பு மனு தாக்கல்செய்தார். கடைசி நாளான இன்று, மதுசூதனன், டி.டி.வி.தினகரன், தீபா உள்ளிட்டவர்கள் வேட்பு மனு தாக்கல்செய்தனர். இன்று மாலை, மூன்று மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 127 பேர் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளனர். இன்று மட்டும் 72 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர். நாளை, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com