சற்று முன்
Home / சினிமா / “ஆர்யாவோட முடிவு தப்பா தெரியல’’ – `எங்க வீட்டு மாப்பிள்ளை’ சீதாலட்சுமி

“ஆர்யாவோட முடிவு தப்பா தெரியல’’ – `எங்க வீட்டு மாப்பிள்ளை’ சீதாலட்சுமி

“எங்க வீட்டு மாப்பிள்ளை’தான் நான் கலந்துக்கிட்ட முதல் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும் ரொம்ப புதுசா இருந்துச்சு. இதுல என்ன இருக்குனு ஆர்வத்தோட கலந்துக்கப் போனேன்..” எனப் படபடவென பேச ஆரம்பிக்கிறார் சீதாலட்சுமி.

`எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோவோட ஃபைனல்ல ஆர்யா அந்த முடிவைச் சொன்னதும் உங்களுக்கு எப்படி இருந்தது..?

“ஃபைனல் அப்போ அவர் கையில் டோக்கன் ஆஃப் லவ் ரிங் வச்சிருந்ததை பார்த்தப்போது, வின்னர் பெயரைச் சொல்லப்போறாருனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால், அவர் எதுவும் சொல்லாம, `நன்றி, வணக்கம்’னு சொன்னதும் எனக்கு செம ஷாக். முதலில் இது ப்ராக்கா இருக்குமோனு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது இதுதான் உண்மைனு. இது வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான முடிவா இருந்தனால, இதை பெர்ஷனலா கொண்டு போகலாம்னு நினைச்சிருப்பார் போல. ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது. இப்போ நியாயமா படுது.’’

ஒரு போட்டியாளரா ஆர்யாவோட முடிவு சரினு சொல்றீங்க… நீங்க ஆடியன்ஸா இருந்தா இந்த முடிவு சரினு சொல்லுவீங்களா..?

“ஆடியன்ஸுக்கு இது ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அவங்களும் யோசிச்சுப் பார்த்தா இது நியாயம்னு தோணும்.’’

இந்த நிகழ்ச்சி முடிஞ்சதுக்குப் பிறகு உங்க வீட்டுல என்ன சொன்னாங்க..?

“அவங்க என்ன நினைப்பாங்கனு எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. ஆனால், ஃபைனல் அப்போ எங்க ஃபேமிலி என்னை விட்டுக்கொடுக்காம என்கூடவே இருந்தாங்க. ரிசல்ட் நெகட்டிவ்வா வந்தா நான் ஃபீல் பண்ணக்கூடாதுனு நினைச்சாங்க. வின் பண்ணலைனா அழக் கூடாதுனு நானும் நினைச்சிட்டு இருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் என்னோட வெற்றி, தோல்விகளில் எங்க ஃபேமிலி எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.’’

இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும், இதில் கலந்துக்க எப்படி ஆர்வம் வந்துச்சு..? ஃபேமிலியில் எப்படி ஓகே சொன்னாங்க..?

“ஜெய்ப்பூருக்கு தனியா போகணும்; அங்கேயே கிட்டத்தட்ட 2 மாதங்கள் இருக்கணும்னு சொன்னதுக்கு, எங்க அப்பா, அம்மா முதலில் ஓகே சொல்லலை. நான் எப்படியும் அடம் பிடிச்சுப் போயிடுவேன்னு அவங்களுக்குத் தெரியும். நானும் ,`ரெண்டு, மூணு நாள் எப்படியிருக்குனு பார்த்துட்டு வந்திடுறேன்’னு சொல்லிட்டு போனேன். அங்க போனதும் ஒரு பேலஸ்; ராணி மாதிரி பல்லாக்குல தூங்கிட்டு போனாங்க; பக்கத்துல ஆர்யா; இதெல்லாம் தனி உலகமா இருந்துச்சு. எந்த வேலையும் இல்லாம ஆர்யாவை மட்டும் லவ் பண்ணிட்டு இருந்தேன். சில நாள்களில் அவரும் எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ண ஆரம்பிச்சார். சரி இவரை கரெக்ட் பண்ணிடலாம்னு தோணுச்சு.’’

ஆஃப் த கேமராவின் போது அங்க என்னெல்லாம் நடந்துச்சு..?

“ஆஃப் த கேமராவின் போது ஆர்யாகிட்ட அதிகமா பேசுனது நான்தான். அதுக்கு அங்க சில பிரச்னைகள் வந்துச்சு. எல்லாரும் ஆர்யாகிட்ட ஆஃப் த கேமராவிலதான் அதிகமா பேச ட்ரை பண்ணுவாங்க. அந்த டைம்லதான் அவரைப் பற்றி அதிகமா தெரிஞ்சுக்க முடியும். நாங்க இப்படி ஸ்மார்ட் வொர்க் பண்ணினா ஆர்யாவும் செம ஸ்மார்ட்டா இருப்பார். ஆஃப் த கேமராவில் எந்த விஷயத்தையும் சொல்ல மாட்டார். இருந்தாலும் நாங்க விடாம, இதை ஒரு டாஸ்க்கா எடுத்துக்கிட்டு அவரைப் பற்றி தெரிஞ்சுக்க இதெயெல்லாம்தான் ஆஃப் த கேமராவில் ட்ரை பண்ணுவோம்.’’

டோக்கன் ஆஃப் லவ்வே வாங்காம ஃபைனல் வரைக்கும் போயிருக்கீங்களே..!?

“டோக்கன் ஆஃப் லவ் முக்கியம் இல்லை; லவ்தான் முக்கியம்னு போயிட்டு இருந்தேன். நான் எப்போதெல்லாம் எலிமினேட் ஆகப்போறேன்னு நினைச்சிப்பேனோ, அப்போதெல்லாம் ஆர்யா என்னைக் காப்பாத்திடுவார். இதை ஜாலியா எடுத்துக்கிட்டு ஃபைனல் வரைக்கும் போயிட்டேன்.’’

நிகழ்ச்சிக்கு அப்புறமும் ஆர்யாகூட பேசிட்டுத்தான் இருக்கீங்களா..?

“ஆமாம், பேசிட்டுத்தான் இருக்கோம். இந்த நட்பு எதிர்காலத்துல எப்படி மாறும்னு தெரியலை. பொறுத்திருந்து பார்க்கலாம். ஆர்யா ஓகே சொன்னா கல்யாணம் பண்றதுக்கு நான் ரெடி.’’

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ – இளையராஜா இசையமைக்கிறார்

5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ படத்திற்கு, இளையராஜா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில், ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com