சற்று முன்
Home / செய்திகள் / ஆர்மீனிய இனப்படுகொலையின் 103 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்

ஆர்மீனிய இனப்படுகொலையின் 103 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்

ஆர்மீனிய இனப்படுகொலையின் 103 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
இவ் இனப்படுகொலையின்போது 1.5 மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

1975 ஆம் ஆண்டு பெய்ரூட்டில் அனுஷ்டிக்கப்பட்ட ஆர்மீனிய இனப்படுகொலையின் 60-வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஒரு இலட்சம் ஆர்மீனியர்கள் கலந்து கொண்டனர்.

வரலாறு

ஆர்மீனிய இனப்படுகொலை, ஆர்மேனிய இனப்படுகொலை அல்லது ஆர்மேனிய பெரும் இனவழிப்பு (Armenian Genocide) என்பது ஒட்டோமான் பேரரசுக் காலத்தில் ஆர்மீனியர்களை வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தது.[8] பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றில் இருந்து ஒன்று அரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் ஆர்மீனியர்களைத் தவிர அசிரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வினப்படுகொலை 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ, நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.

ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிக் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இது வரையில் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டில் நடந்த இனப் படுகொலைகளில் ஆர்மீனிய இனப் படுகொலையே, முதல் இனப் படுகொலை என போப் ஆண்டவர் பிரான்சிசு கருத்து தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com