சற்று முன்
Home / செய்திகள் / ஆர்னோல்ட் உள்ளே அம்பிகா வெளியே – நண்பிக்கு தேசியப் பட்டியல் கொடுத்து சேவ் செய்தார் சுமா

ஆர்னோல்ட் உள்ளே அம்பிகா வெளியே – நண்பிக்கு தேசியப் பட்டியல் கொடுத்து சேவ் செய்தார் சுமா

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின்) சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகிறார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையக பணிமனையில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் வேட்பாளராக இணைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

அத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com