ஆரம்பப் பாடசாலை வளாகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

பொலன்னறுவை, வெலிகந்த லும்பினி ஆரம்பப் பாடசாலை வளாகத்திலிருந்து, வெடிபொருட்களை மீட்டுள்ளதாக, வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

ஜொனி வகையைச் சேர்ந்த மிதிவெடிகள், ஆர்.பி.ஜி வகையைச் சேர்ந்த குண்டுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தப் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடங்களில் பல, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல் ஜயரத்னவினால் திறந்துவைக்கப்படவிருந்தன.

அதனையொட்டி, பாடசாலை வளாகத்திலும், மைதானம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே, மேற்படி வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவ்விடத்தை, இராணுவத்தினர் இராணுவ முகாமாக இதற்கு முன்னர் பயன்படுத்தி வைத்திருந்திருந்தாக அறியமுடிகின்றது.

இதேவேளை, இவ்விடத்தில் இன்னுமின்னும் ஆயுதங்களும் வெடிபொருட்களும் இருக்கின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, பாடசாலையினதும் மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com