சற்று முன்
Home / செய்திகள் / ஆரம்பப் பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடம்

ஆரம்பப் பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடம்

நாடு முழுவதும் ஆரம்ப பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.

சுமார் 8000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகள் உள்ளிட்ட பாடசாலை கட்டமைப்பிற்குள் நிலவும் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த விடயம் குறித்து குறிப்பிட்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஆரம்ப பாடசாலைகளுக்கான ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளதாக திஸ்ஸ ஹேவாவித்தாரன குறிப்பிட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com