சற்று முன்
Home / செய்திகள் / ஆயுள் காலம் முடிவடையும் சபைகளில் செயல்படும் அதிகார சபைகளை கலைக்க உத்தரவு

ஆயுள் காலம் முடிவடையும் சபைகளில் செயல்படும் அதிகார சபைகளை கலைக்க உத்தரவு

ஆயுள் காலம் முடிவடையும் சபைகளில் செயல்படும் அதிகார சபைகளை கலைத்து புதிய சபைகளை ஆளுநர்கள் நியமிக்குமாறு ஜனாதிபதி நேற்றைய சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள 9 மாகாண சபைகளின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடன் தற்போதுவரை ஆயுட்காலம் உள்ள மாகாண சபைகளின் முதலமைச்சர்களிற்குமிடையிலான கலந்துரையாடல் ஓன்று நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே குறித்த விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார். அதாவது ஏற்கனவே ஆயுட் காலம் முடிவடைந்த சபைகள் மற்றும் ஆயுட் காலம் முடியும் சபைகளில் செயல்படும் அதிகார சபைகளை அந்த திகதிகளில் இருந்து கலைத்து புதிய அதிகார சபைகளை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. எனவே அதனை நடைமுறைப் படுத்த முடியும்.

இதேநேரம் வடக்கு மாகாண சபையிலேயே மிக குறைந்த அதிகார சபைகளான இரண்டு அதிகார சபைகள் செயல்பனுகின்றன. இதில் ஒரு அதிகார சபையான போக்கு வரத்து அதிகார சபைக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் 2018-10-01 திகதியிட்ட கடிதம் மூலம் முன்னாள் தலைவரை பதவி நீக்கி புதியவரை நியமித்து ஓர் அரசியல் பழி வாங்கலை மேற்கொண்டதான சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் பாதிக்கப்பட்ட தலைவர் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் இடத்தில் மீண்டும் பழய நிலமை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படக் கூடிய சூழலே காணப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com