ஆயுத கிடங்கு தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 47 பேர் காயம்! – அரசு அறிவிப்பு

ccc4bddcd2332d40db2d7b1771460747_Lகொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தின் காரணமாக 47 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த முகாம் தற்போது வரை புகைந்தவாறு காணப்படுகின்து. இதேவேளை, ஹைலவல் வீதி, களுஅக்கல சந்தியில் மூடப்பட்டுள்ளதோடு, குறித்த வீதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெடித்துச் சிதறிய ஆயுதங்களின் பகுதிகள் அங்குமிங்கும் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். குறித்த விபத்தின் காரணமாக கொஸ்கம வைத்தியசாலைக்கும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் ஜே.பி. சுபசிங்க தெரிவித்தார்.

குறித்த சேதத்தை சரிசெய்ய, சுமார் 6 மாத காலம் வரை செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த பகுதியின் சுமார் ஒரு கிலோ மீற்றர் வரையான பகுதிக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். வெடிக்காத மற்றும் வெடிக்கும் நிலையில் உள்ள ஆயுதங்கள் வெடிக்கலாம் எனும் அச்சம் காரணமாக குறித்த பிரதேசத்திற்குள் யாரும் வர வேண்டாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பிரதேசத்தின் நிலைமை குறித்து அறிவதற்காக பொதுமக்கள் சேர்கின்றமையால் அப்பகுதியில் அதிக வாகன நெரிசல் மற்றும் பாதுகாப்புக் கடமைகளுக்கும் இடைஞ்சல் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தேவையின்றி அப்பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்வினால், கொஸ்கம, கொட்டஹெரகந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியிலுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தீ ஏற்பட்ட இராணுவ முகாமின் வளாகத்திற்குள் இன்று (06) அதிகாலை சென்று கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். மக்களுக்கு ஏற்பட்டுவரும் சேதங்களை குறைக்கும் நோக்கில் இராணுவம் விரைவாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். இராணுவ முகாமை அண்மித்த பகுதியிலுள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்திலுள்ள வீடுகளில் வெளியேற முடியாமல் உள்ளவர்கள் தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com