ஆயுதக்களஞ்சியத்தின் வெடிப்பு காரணமாக 1,763 குடும்பங்கள் இடம்பெயர்வு 50 வீடுகள் சேதம்

22596f18dbc1968d85e5cc85a0fe5bc2_Lகொஸ்கம ஆயுதக்களஞ்சியத்தின் வெடிப்பு காரணமாக நேற்று (05) இரவு 1,763 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த மற்றும் கயந்த கருணாதிலக உள்ளிட்டோர் இன்று (06) சீதாவாக்கை பிரதேச செயலக காரியாலயத்தில் வைத்து, குறித்த பிரதேச செயலகத்தின் செயலாளர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடிய போது, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் 48 – 96 மணித்தியாலங்களுக்குள், மக்களை உரிய இடத்தில் மீண்டும் குடியமர்த்தவுள்ளதாகவும், ஒரு கிலோமீற்றர் வரையான பகுதி இன்றும் பாதுகாப்பற்ற பகுதி என பொலிஸ் மாஅதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, குறித்த சம்பவத்தின் காரணமாக 1,763 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

pm-at-kosgama-salawa-2
தொழிற்சாலை, வாகனம், சுமார் 75 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு அதில் 50 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக, இராணுவ மேஜர் சன்ன குணதிலக தெரிவித்தார்.
வீடுகளை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன், முற்றாக சேதமடைந்த வீடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்த பிரதமர், தற்போது தேவையாகவுள்ள உணவு மற்றும் குடிநீர் என்பவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இராணுவத்தினருக்கு, கொடுப்பனவை வழங்கி, வீடுகளை விரைவாக கட்டி முடிக்க முடியுமா என ஆராயவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், பாதுகாப்பற்ற 9 கிராமசேவகர் பிரிவுகளைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகளை நாளை (07) திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நாளை பாடசாலை விடுமுறை

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இராணுவத்தினர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, சீதாவாக்கை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 07 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளை சுத்தம் செய்து, பாதுகாப்பான பிரதேசமாக மாற்றும் பொருட்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,
1. அகரவிட்ட மகா வித்தியாலயம்
2. சாலாவ மத்திய மகாவித்தியாலயம்
3. களுஅக்கல சித்தார்த்த கணிஷ்ட வித்தியாலயம்
4. புனித ஜோன் பொஸ்கோ மகா வித்தியாலயம்
5. கொஸ்கம சுமேதா வித்தியாலயம்
6. கடுகொட கணிஷ்ட வித்தியாலயம்
7. கொஸ்கம மகா வித்தியாலயம்

ஆகிய 07 பாடசாலைகளுக்கும் நாளை (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

pm-at-kosgama-salawa-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com