“ஆனந்த சங்கரி என்னைத் தாக்கினார்” – தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பொலிசில் முறைப்பாடு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியத்தினாலேயே இந்த முறைப்பாடு இன்று (02) பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தலைமையில் இன்று (02) காலை கலந்துரையாடல் ஒன்று யாழ். நாச்சிமார் கோவிலடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது.

அங்கு சென்ற கட்சியின் தலைவர் சிவசுப்பிரமணியம் ஏன் தலைவருக்கும் பொருளாளருக்கும் அறிவிக்காது கலந்துரையாடல் நடாத்துகின்றீர்கள். இவ்வாறு நடப்பது சரியானதா என கேட்ட போது, செயலாளரான ஆனந்த சங்கரி சென்று அவருக்கு அடிதுள்ளார்.

ஏற்கனவே, உடல் சுகயீன முற்றுள்ள இவர் உடனடியாக வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக, கனடாவிற்கு சென்ற பின்னர் வழக்குத் தொடர்வது தொடர்பாக முடிவெடுப்பதாகவும் அவர் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com