ஆணைக்குழு விசாரணையில் மரணச்சான்றிதழ் பெறுமாறு அழுத்தம் !

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது சாட்சியம் அளிக்க வருபவர்களிடம் உங்களுக்கு மரண சான்றிதழ் தரவா நஷ்டஈடு தரவா என ஆணைக்குழுவினர் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீங்கள் மரண சான்றிதழை பெற்றால் நஷ்டஈட்டை பெற முடியும் அதேவேளை காணாமல் போனவர் திரும்பி வந்தால் மரண சான்றிதழை இரத்து செய்யலாம். நஷ்ட ஈட்டை திருப்பி கொடுக்க தேவையில்லை எனவும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆணைக்குழுவினர் சாட்சியங்களிடம் கூறி வருகின்றனர்.

யாழில் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே சாட்சியம் அளிக்க வருபவர்களிடம் ஆணைக்குழுவினர் இவ்வாறு வலியுறுத்துவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை மரண சான்றிதழை பெற்றால் காணாமல் போனோர் தொடர்பான விசாரணையை ஆணைக்குழு கைவிடாது எனவும் ஆணைக்குழு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் எனவும் அவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கும் போது காணமல் போனவர் கண்டறியப்பட்டாலோ அல்லது காணாமல் போனவர் திரும்பி வந்தாலோ மரண சான்றிதழை இரத்து செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்தாலும் சாட்சியம் அளித்தவர்களில் பலர் உயிரோடு இருக்கின்றார்கள் என நம்பும் ஒருவருக்கு எவ்வாறு மரண சான்றிதழை பெற முடியும். எனவே எமக்கு நஷ்ட ஈடு வேண்டாம் எமக்கு காணாமல் போனவர் கண்டறியப்பட வேண்டும். அதற்காகவே நாம் பல வருடங்களாக போராடி வருகின்றோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds