ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க கோரிக்கை!

பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிணைமுறி மோசடிகள் தொடர்பிலான சாட்சிகள் திரட்டும் நடவடிக்கைகள் யாவும் நிறைவடைந்துள்ளதுடன், இது குறித்த இறுதி அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதன் காரணமாக ஆணைக்குழுவின் கால எல்லையை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com