சற்று முன்
Home / செய்திகள் / ஆட்டோவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதான தகவலால் யாழில் பரபரப்பு

ஆட்டோவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதான தகவலால் யாழில் பரபரப்பு


யாழ் செம்மணியிலிருந்து கொக்குவில் ஊடாக பெண்ணொருவர் பச்சைநிற ஆட்டோவில் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தான் துரத்திச் சென்றதாகவும் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திற்கு முன்னால் தன்னை நோக்கி பெண் ஒருவரின் ஆடை ஒன்றை வீசி விட்டு ஆட்டோ தப்பிச் சென்றதாகவும் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் கம்பன் புலம் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது பெயரில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தில் வாகன Tex அனுமதிப் பத்திரம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com