ஆட்டுத் திருடனுக்கு 6ஆயிரம் ரூபா அபராதம்

அச்சுவேலி பகுதியில் இருந்து ஆடு ஒன்றினையும் இரண்டு குட்டிகளையும் திருட்டு தனமாக கடத்தி சென்ற வியாபாரிக்கு 6ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார் மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன். கடந்த சனிக்கிழமை(09) மோட்டார் சைக்கிளில் பெட்டி ஒன்றினை வைத்து ஆடுகளை கடத்தி சென்ற அராலிவீதி பொம்மைவெளி பகுதியினை சேர்ந்த இறைச்சி வியாபாரியினை அச்சுவேலி பொலிஸார் புத்தூர் பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர். கடந்த 11 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரம் மன்றில் வாசிக்கப்பட்ட போது குற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அனுமதிபத்திரம் இன்றி ஆடுகளை கடத்தி சென்ற குற்றத்திற்காக 6ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com