ஆட்டுத் திருடனுக்கு விளக்கமறியல்

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் பக்கத்து வீட்டு ஆட்டினை திருடி திருநெல்வேலி பகுதியில் விற்பனை செய்த பலே திருடனை 14நாட்கள் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் நேற்று(08) உத்தரவிட்டார். கடந்த 5ம் திகதி சந்நிதிகோயில் தேர்திருவிழா அன்று வீட்டில் இருந்த அணைவரும் கோயிலுக்கு சென்றுள்ளனர். இந் நிலையில் குறித் நபர் பக்கத்து வீட்டு ஆட்டினை திருடி விற்றுள்ளார். ஆட்டினை காணாதவர் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். ஆட்டினை கால் அடையாளத்தினை குறித்த சந்தேக நபரின் வீட்டில் கண்ணுற்ற பொலிஸார், துருவல் விசாரணையினை மேற்கொண்டனர். இதன் போது ஆடு திருடி விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர் நேற்றையதினம்(08) கைதாகி மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டடார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com