ஆடைத்தொழிற்சாலையில் 200 பெண் பணியாளர்கள் திடீர் மயக்கம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த பெண்கள் மயக்கமுற்ற நிலையில், ​டிக்கோயா மாவட்ட வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் பணிபுாிந்த சுமார் 200 பெண்கள் வரையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று புதன்கிழமை காலையில் வழங்கப்பட்ட உணவால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் அவர்கள் மயக்கம் அடைந்ததற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என டிக்கோயா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com