ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 25 ஆயிரம் நியமனங்கள் – கல்வி அமைச்சர்

Ministry_of_Educationஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான திட்டமொன்று வகுக்கப்படும் என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதன் மூலம் நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் காலங்களில் 25 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குளியாபிடிய பிரதேசத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை பிரதேச செயலாளர் அலுவலக மட்டத்தில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பாடசாலை சீருடைக்கான கொடுப்பனவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி இதுவரை 400 ரூபாவாக இருந்த சீருடைக்கான கொடுப்பனவை 500ஆக அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான திட்டமொன்று அவசியம் என்பது தற்போது அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும். பிரதமரின் ஆலோசனைக்கமைய வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் இது தவிர கல்வி மேம்பாட்டுக்காக எதிர்காலத்தில் பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் ஆயிரம் விமர்சனங்களை விடவும் இலட்ச வாழ்த்துக்களே முக்கியம் என்று அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com