ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க கோரி பிரேரணை

கடந்தவருடம் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கும்படி மத்திய அரசாங்கத்தை கோரும் பிரேரணையை மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ் மற்றும் பழனி சக்திவேல் ஆகியோர் கூட்டாக முன்வைத்துள்ளனர்.

 

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தற்போது 6000 ம் ரூபா கொடுப்பணவு மட்டுமே வழங்கப்பட்டடு வருகிறது. அத்துடன் திட்டமிடப்பட்டு வழங்கத் தீர்மானித்த நியமனங்களில் இன்னும் 800 பேருக்கான நியமனத்தை வழங்காமல் காலந்தாழ்த்தப்பட்டு வருகின்றது.

நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற  கொடுப்பனவு தொகையை கொண்டு தமது போக்குவருத்து செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத நிலையில் இந்த ஆசிரியர் உதவியாளர்கள் இருக்கின்றார்கள். இதனால் இத் தொழிலை விட்டு வெளியேருகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கின்றது.

இவ்விடயங்களை கருதிற்கொண்டு இந்த ஆசிரியர் உதவியாளர்களை இலங்கை ஆசிரியர் சேவை 3.11ற்கு உள்வாங்கி அவர்களுக்கான கொடுப்பனவையும் இலங்கை ஆசிரியர் சேவை 3.11ற்கானதாக பிரகடணப்படுத்த வேண்டும் என மத்திய மாகாண சபையின் உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பழனி சக்திவேல் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds