ஆகாயம் நோக்கிச் சுட்ட குண்டுதான் மாணவர்கள் மீது பட்டுவிட்டது – சட்டம் ஒழுங்கு அமைச்சர்

sagala_ratnayakeகொல்லப்பட்ட மாணவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் அதனால்தான் பொலிஸார் மறித்தபோது அவர்கள் நிற்காமல் சென்றதாகவும் இன்று (25) பாராளுமன்றில் தெரிவித்துள்ள  சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்கா ஆகாயத்தை நோக்கிச் சுட்டபோதுதான் மாணவர்களுக்கு துப்பாக்கிச் சூடு பட்டதாகவும்  கூறியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இர.சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்கா மாணவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் அதனால்தான் பொலிஸார் மறித்தபோது அவர்கள் நிற்காமல் சென்றதாகவும் குறிப்பிட்டார்.
இந்த பதிலை ஏற்க மறுத்த சம்பந்தன் ஆகாயத்தை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்றால் எவ்வாறு மாணவனின் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது என்று கேள்வி எழுப்பினார்.
மீண்டும் பதலளித்த அமைச்சர் சாகல ரட்ணாயக்கா அது தெடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் மாணவர் படுகொலை தொடர்பாக தனக்கு கிடைத்த தகவலை மாத்திரமே கூறியதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை சம்பந்தனின் அறிக்கைக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாணவர் படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.
அப்போது குறிக்கிட்ட விமல் வீரவன்ச சுன்னாகம், மற்றும் மன்னார் முசலி பிரதேசங்களில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா எனவும் வினவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com