அவசர விபத்து முதலுதவி சேவைக்கு உலங்கு வானூர்தி

அவ­சர விபத்­துக்­களின் போது விபத்­துக்­குட்­பட்­ட­வ­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்­க­வென எதிர்­கா­லத்தில் அம்­பி­யூலன்ஸ் சேவை­யுடன் அதி­ந­வீன மற்றும் சகல வைத்­திய வச­தி­க­ளுடன் உ லங்கு வானூர்தி (ஹெலி­கொப்டர் ) சேவையும் விரைவில் நடை­மு­றைக்கு கொண்­டு     வ­ரப்­படும் என்று சுகா­தார, போசாக்கு மற்றும் சுதேச மருத்­துவ அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

முத­லு­தவி சேவைக்­கான உப­க­ர­ணங்­களை பாட­சா­லைகள் மற்றும் பிராந்­திய வைத்­திய நிலை­யங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்கும் நிகழ்வு தொற்றா நோய் தடுப்பு பிரி­வினால் இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நடத்­தப்­பட்­டது. இதன்­போது சுகா­தாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்­துவ பிரதி அமைச்சர் பைசல் காசிம், வைத்­திய அதி­கா­ரிகள், அதிபர், ஆசி­ரி­யர்கள் மற்றும் மாண­வர்கள் என பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர். இதன்போது பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், சிறந்த அபி­வி­ருத்தி அடைந்த நாடு­களை போன்ற சுகா­தார அபி­வி­ருத்தி கொண்ட நாடா­கிய இலங்­கையில், ‍இரு­தய நோய்­க­ளுக்கு அடுத்து அதி­க­ள­வான மர­ணத்தை தோற்­று­விப்­பது வீதி விபத்­துக்­க­ளாகும். ஆனால் விபத்­து­களின் போது விபத்­துக்­குட்­பட்­ட­வ­ருக்கு அவ­ச­ர­மாக முத­லு­தவி சேவை கிடைக்­கு­மாயின் அவரின் உயி­ரா­பத்து குறைக்­கப்­படும். அதற்­கான ஒரு அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­யாக எதிர்­கா­லத்தில் அவ­சர முத­லு­தவி சேவையில் உலங்கு வானூர்திகளும் பென்ஸ் வாக­னங்­களும் பயன்­பாட்­டிற்கு கொண்­டு­வ­ரப்­படும்.

இந்­தி­யாவில் இருந்து இலங்­கைக்கு கிடைத்த 88அம்­பி­யூலன்ஸ் வாக­னங்­க­ளுடன் மேல­தி­க­மாக 250 வாக­னங்கள் எதிர்­வரும் வரு­டத்தில் எமக்கு இல­வ­ச­மாக கிடைக்கும். இந்த வாக­னங்­க­ளுடன் உட­னடி சேவையை பெற்­றுக்­கொ­டுக்­க­வென பிரத்­தி­யேக வைத்திய சேவை நிபுணர் ஒருவரும் காணப்படுவார். 2018 காலப்பகுதியில் முழுமையாக இந்த அவசர வைத்திய முதலுதவி சேவைக்கான அனைத்து தேவைகளும் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com