சற்று முன்
Home / செய்திகள் / அர்ஜன ரணதுங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் வரும்போது குழப்பம் – துப்பாக்கிச்சூடு – மூவர் படுகாயம்

அர்ஜன ரணதுங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் வரும்போது குழப்பம் – துப்பாக்கிச்சூடு – மூவர் படுகாயம்

தெமடகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்திற்குள் வருகை சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் குழப்பம் ஏற்பட்டதால் பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவ்வாறு மூவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com